2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பு திருத்த நடவடிக்கைகளுக்கான மாதிரி படிவம் விநியோகம் இன்று (16) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
கிராமசேவகர் அதிகாரிகள் மூலம் இந்த தேர்தல் இடாப்பு மாதிரி படிவங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இந்த வருடம் ஜூன் முதலாம் திகதிக்கு 18 வயதை பூர்த்தியாகும் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் வாக்காளர் இடாப்பு பத்திரத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்வதற்கு முடியுமாகின்றது. அத்துடன் பூர்த்திசெய்யப்பட்ட மாதிரி இடாப்பு பத்திரத்தை எதிர்வரும் ஜூன் 1 ஆம் திகதிக்கு பிறகு கிராமசேவை உத்தியோத்தர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்களை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.