வத்திக்கானில் இருந்து பாப்பரசரின் விஜயம் தொடர்பில் வந்துள்ள குழுவினருக்கும், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கை படைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது தேர்தல் ஒன்று தொடர்பில் பேசப்படவில்லை, ஏனெனில் தேர்தல் திகதி ஒன்று இன்னும் அறிவிக்கப்படாமையாலாகும்.
இந்தநிலையில் பாப்பரசர் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடைபெறுமானால் நாடு இயல்புக்கு திரும்ப அந்த நாட்கள் போதுமானதாக இருக்கும் என்றும் ஆயர் சுவாம்பிள்ளை குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை பௌத்த நாடு என்ற வகையில் பாப்பரசரின் விஜயம் காரணமாக தேர்தலில் யாருக்கும் சாதகம் ஏற்படப் போவதில்லை, பாதகமே ஏற்படும் என்று ஆயர் கருத்துரைத்தார். (k)