Breaking
Sat. Jan 11th, 2025

2015 ஜனவரி 8 இல் நடைபெறவுள்ள ஜனாதி பதித் தேர்தலைக் கண்கா ணிப்பதற்கு 4 சர்வதேச கண் காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள் ளன என்றும், இதில் பங் கேற்பதற்கு ஐ.நாவின் தேர்தல் கண்காணிப்புப் பிரி வுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித் தார்.

இராஜகிரியவிலுள்ள தேர்தல் கள் செயலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி லேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறி யவை வருமாறு:-

4 இலட்சத்துக்கும் அதிகமான வாக் காளர்கள் அடையாள அட்டையின்றி உள்ளனர். இவர்களுக்கு அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுப்பதற் கான நடவடிக்கைகளை ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றோம். இதற் காக நடமாடும் சேவையும் முன்னெடுக் கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு பெப்ரல் மற்றும் கபே முதலான தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

தேர்தல் கண்காணிப்புப் பணிக ளில் ஈடுபடுவதற்காக நான்கு சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக ளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். 1988 ஆம் ஆண்டு முதல் இலங் கையில் இடம்பெறும் தேர்தல்களின் கண்காணிப்புப் பணிகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படு கின்றனர். இலங்கையின் தேர்தல் நடைமுறைகளில் பிரச்சினை இல்லை. அன்றைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டே சர்வதேச கண் காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டனர்.

இதற்கமைய இம்முறையும், ஐரோப்பிய ஒன்றியம், பொது நலவாய நாடுகள் அமைப்பு, ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, தெற்காசிய தேர்தல் கண் காணிப்பு அமைப்பு ஆகிய 4 அமைப்பு களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். ஐ.நா. அமைப்புக்கு நாம் அழைப்பு விடுக்கவில்லை. ஏனெனில், ஒரு நாட்டில் முதலாவது முறையாக தேர் தல் நடைபெற்றால்தான் ஐ.நா. அமைப்பின் தேர்தல் கண்காணிப்பா ளர்கள் தேர்தல் கண்காணிப்பு பணி யில் ஈடுபடுத்தப்படுவர். இலங்கையில் அவ்வாறான நிலைமை இல்லை. அதனால்தான் ஐ.நா. அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை-என்றார்.

Related Post