Breaking
Sat. Nov 16th, 2024

திர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைப் போல், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமால், தனது சமூகத்துக்கான தேவைகளை ஆளுந்தரப்பிடமிருந்து பேரம் பேசிப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக முன்னாள் மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் குற்றம் சாட்டினார்.

தேர்தல் காலத்தின் போது, மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தருவதாக கட்சிகளிடம் பணப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டமையினால்தான், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் இப்போது சமூகத்துக்கான பேரம் பேசலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அன்சில் கூறினார்.

கட்சிகளிடமிருந்து தேர்தல் காலங்களில் மு.காங்கிரஸ் தலைவர் பணப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதாக, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் றிசாட் பதியுதீனும் மேடைகளில் பேசி வருவதாகவும் அன்சில் சுட்டிக்காட்டினார்.

அம்பாறை மாவட்டம் பாலமுனையில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மு.கா.வின் மறைந்த தலைவர் அஷ்ரப்புடைய கொள்கைகள் இல்லாத ரஊப் ஹக்கீம், எப்படி முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருக்க முடியும். அஷ்ரப்புடைய கொள்கைகள் இல்லாத ரஊப் ஹக்கீம் தலைவராக இருக்கின்ற கட்சி, எப்படி முஸ்லிம் காங்கிரஸாக இருக்க முடியும்.

அப்படியென்றால், முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சிக்கு தலைவராக இருப்பதற்கு ரஊப் ஹக்கீமுக்கு தகுதியில்லை. ரஊப் ஹக்கீம் தலைவராக இருக்கின்ற கட்சி, முஸ்லிம் காங்கிரஸாக இருக்கவும் முடியாது.

மஹிந்த ராஜபக்ஷவை கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதற்காக 600 மில்லியன் ரூபாவினை ரூபாவை ஹக்கீம் பெற்றார்.

பிறகு மைத்திரியின் பக்கம் மக்கள் வந்து விட்டார்கள் என்ற நிலை ஏற்பட்ட பின்னர், மைத்திரியின் பக்கம் வந்த ஹக்கீம் 200 மில்லியன் ரூபாவினை பெற்றுக் கொண்டார்.

இதனை அமைச்சர் றிசாட் பதியுதீன் பகிரங்கமாக மேடைகளில் பேசி வருகின்றார்” என்றார்.

Related Post