Breaking
Sun. Dec 29th, 2024

ஓட்டமாவடி அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் காலங்களில் கல்குடாவுக்குள் பிரவேசித்து கட்சி பாடல்களை போட்டு பிரதேசத்தில் இருக்கின்ற அரசியல் தரகர்களின் உதவியுடன் கல்குடா மக்களை ஏமாற்றிச் செல்கின்றனர் என சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று வெள்ளிக்கிழ்மை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் கல்குடா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்திய 2011,2012,2013ம் ஆண்டுகளுக்காக கல்குடாவிலிருந்து பல்கலைக் கழகத்துக்கு தெரிவான மாணவ, மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு உரையாற்றினார்.

மேலும் அங்கு உரையாறிய பிரதி அமைச்சர்…. மிக விரைவில் ஒரு தேர்தலை நாங்கள் எதிர் நோக்கும் பட்சத்தில் இப்போது இருக்கின்ற விகிதாசார தேர்தல் முறையானது மீண்டும் அமுல்படுத்தப்படுமாயின் நாம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் மறுபக்கத்தில் தேர்தலானது ஆறு மாதங்களுக்குப் பிற்பாடு வருமாயின் அது தொகுதிவாரியான தேர்தல் ஆகவே வரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறு தொகுதிவாரி தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டால் காத்தான்குடியையும் ஏராவூரையும் இரட்டை தொகுதியாக மாற்றினாலும் பிரதிநித்தித்துவத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு சந்தேகத்துகிடமாகவே இருக்கின்றது.

ஏனென்றால் மட்டக்களப்பு தொகுதியை எடுத்துக் கொண்டால் 195000 வக்குகளை கொண்ட அத்தேர்தல் தொகுதியில் ஏராவூரையும் காத்தான்குடியையும் இணைத்தால் வெறும் 52000 வாக்குகளே எமக்கு இருக்கின்றது. ஒரு தமிழரும் முஸ்லிமும் என இரட்டை அங்கத்தவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் 1972ம் ஆண்டு மட்டக்களப்பு தொகுதியை இரட்டை தொகுதியாக்கப்பட்டு இடம்பெற்ற தேர்தலில்  ராஜதுரையும், ராஜன்செல்வநாயகம் ஆகிய இரு தமிழ் சகோதரர்களுமே பாராளுமன்றம் சென்றனர்.

எனவே 35000 வாக்குகளை வைத்திருக்கும் நாங்கள் பிரதிநித்தித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில் எமது பிரதி நித்தித்துவத்தை பிற ஊர்களுக்கு மீண்டும் தூக்கிக் கொடுக்கும் சமூகமாக கல்குடா சமூகம் இருக்க வேண்டுமா என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

நான் இங்கு பேசுவது அமீர் அலிக்காக பேசும் பேச்சல்ல. மாறாக நாளை உங்களுக்காகவும் உங்களின் பிள்ளைகளுக்காகவும் வரலாறு சொல்லப்பொகின்ற பேச்சாகும். தொகுதிவாரியான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் பொழுது 35000 வாக்குகளை வைத்திருக்கும் கல்குடாவைப் பற்றி ஏனைய அரசியல் கட்சிகள் பேசுவதற்க்கு தயாராக இருக்கமாட்டார்கள். ஏனென்றால் கல்குடாவுக்கு பிரதி நிதித்துவம் கிடைக்க கூடாது என்பதிலும், அவர்களுடைய ஊர்களுக்கு பிரதிநிதித்துவத்தை கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதிலுதன் அவர்கள் குறியாக இருப்பார்கள்.

கல்குடாவில் கூலிக்குமாரடிப்பவர்களை நிறுத்தி கல்குடாவின் ஒற்றுமையை சிதறடித்து வேறு ஊர்களுக்கு பிரதி நிதித்துவத்தை கொடுக்க வேண்டும் என்பதில் ஒரு சில அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும், அதற்கு தாமரை வீசுகின்றவர்களாக கல்குடா பிரதேசத்தில் உள்ள படித்தவர்கள் என்று சொல்கின்ற ஒரு சிலரும், ஹாஜிமார் சிலரும் அப்படியானர்களுக்கு சோறம்போயுள்ளனர்.

ஆகவே பட்டதாரிகளான நீங்கள் சிந்த்தித்து கடமையாற்ற வேண்டும். எமது பிரதிநித்துவம் பதுக்காக்கபடல் வேண்டும் என்ற விடயத்தில் உங்களுடைய பங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது. வெறுமனே பட்டம் பேற்ற பட்டதாரிகளாக மற்றும் இருந்து விடாமல் அதற்கப்பாற்பட்டு சிந்தித்து சமூகத்துக்காகவும் நாட்டுக்குக்காகவும் உழைக்கும் படித்த சமூகத்தை உறுவாக்கும் திறமை கொண்ட மணிதர்களாக மிளிர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்பதோடு, பட்டத்தினை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் வாதிகளிடம் தொழில் தேடும் பட்டதாரிகளாக மாறிவிடாமல் முடிவிலியாய் இருக்கும் இந்த உலகத்தில் தேடலின் அடிப்படையில் தகுதியான தொழினை சுயமாக தேடிக்கொள்ளும் திறமைமிக்க பட்டதாரிகளாக இந்த உலகதில் பரிணமிக்க வேண்டும் என தனது வாழ்க்கையில் தான் கண்ட அனுபவப்படிபினையினை உதாரணமாக கூறி பிரச்சன்னமாயிருந்த பல்கலைக்கழக மாணவர்களை பிரதி அமைச்சர் அமீர் அலி வேண்டிக்கொண்டார்.

Related Post