Breaking
Mon. Dec 23rd, 2024

தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்ய இம் மாதம் 26 ஆம் திகதி வரை காலம் ஒதுக்கப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த வருடத்திற்கான தேர்தல் படிவங்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே குறித்த படிவங்களை பூர்த்தி செய்து இதுவரை கையளிக்காத நபர்களுக்காக இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் படிவங்கள் கிடைக்காதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தேர்தல் வடிவங்களை பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பதிவிறக்கம் செய்யும் படிவங்களை கிராமசேவகரின் உறுதிப்படுத்தலுடன் மாவட்ட செயலகம் அல்லது தேர்தல்கள் திணைக்கள காரியாலயத்திடம் கையளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கால எல்லை இம்மாதம் 26 ஆம் திகதி வரை மாத்திரமே வழங்கப்படும் என்றும், அதற்கு பின்பு தேர்தல் படிவங்கள் எக்காரணத்தைக் கொண்டும் விநியோகிக்கப்படாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post