தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை திரிவுபடுத்த சிலர் முயற்சி செய்வதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.சம்பிக்க ரணவக்க எழுதிய ”பாழடைந்த பொருளாதாரம்” எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நேற்று பிட்டகோட்டையில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறினார்.
அவர் தெரிவித்ததாவது;
நாம் ஆட்சிக்கு வந்ததும், இந்த நாட்டில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற இடமளிப்பதில்லையென நான் கூட்டமொன்றில் கூறியிருந்தேன். எனினும், தற்போது அந்தக் கருத்தை திரிவுபடுத்தி நான் விமான நிலையத்தை மூடுவதாகக் கூறியதாக பிரச்சாரம் செய்கின்றனர். அவ்வாறு செய்வதற்கு எனக்கு மூளையில் கோளாறு இல்லை. எமது வெற்றியின் பின்னர் சிலர் இந்த நாட்டில் இருந்து வெளியேற முயற்சி செய்வார்கள் என்பது எமக்குத் தெரியும். எனவே, தவறு செய்திருந்தால், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி சுற்றிவளைப்பது எமது கடமையாகும். அதனைக் கட்டாயமாக செய்ய வேண்டும். எனவே அதுபோன்ற பொய்யான கூற்றுக்கள் தொடர்பில் நான் மிகவும் கவலையடைகின்றேன்…. எவ்வாறு நடந்து கொண்டாலும் நாம் பெற்றிபெறுவோம். அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்,