Breaking
Sun. Dec 22nd, 2024

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை இலக்கு வைத்து தேர்தல் விசாரணைப் பிரிவு இன்று முதல் இயங்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் திணைக்களத்தில் இந்த பிரிவு நாளை முதல் இயங்க உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலகங்களில் தேர்தல் விசாரணைப் பிரிவு இந்த மாதம் 6ம் திகதி முதல் இயங்க உள்ளது.

தேர்தல் விசாரணைப் பிரிவுகள் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் அந்தந்த பிரதேசங்களின் நிலைமைகளை கருத்திற் கொண்டு விசாரணைப் பிரிவுகள் நிறுவப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related Post