அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘வேர்ட் ஆப் லைப்’ தேவாலயத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், பெற்ற மகனை அடித்தே கொன்ற குற்றத்திற்காக பெற்றொர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புரூஸ் லியோனார்டு (65) மற்றும் அவரது மனைவி டெபோரா (59) இருவரும் சேர்ந்து தமது மகன்கள் லூகாஸ் லியோனார்டு(19) மற்றும் கிறிஸ்டோபர் (17) ஆகியோரை தேவாலய ஆலோசனைக் கூட்டத்தின்போது கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.
இதில் மூத்த மகன் லூகாஸ் உயிரை இழந்தார். மேலும் கவலைக்கிடமான நிலையில் இளைய மகன் கிறிஸ்டோபர் இப்பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தேவாலய அமைப்பைச் சேர்ந்த டேவிட் மோரே(26), லிண்டா மோரே(54), சாரா பெர்குசான்(33) மற்றும் ஜோசப் இர்வின் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல மணிநேரங்களாக கடுமையாக அடித்து, மிதித்து தாக்கப்பட்ட காரணத்தினாலேயே லூகாஸ் இறந்துபோனதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், அவனைத் தாக்க ஏதேனும் ஆயுதங்களை பயன்படுத்தினரா என தெரிவிக்கப்படவில்லை.