Breaking
Wed. Dec 25th, 2024

அஸ்ரப் ஏ சமத்

உலக வாழ் இந்துக்கள் உழவர் திருநாளாம் தைப்பொங்கள் திருநாளை இன்று (15) மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர் .

இந்த வகையில் குறிப்பாக கொழும்பு வாழ் இந்து மக்கள் தமது வீடுகளையும் ஆலயங்களையும் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து அதிகாலையிலேயே எழுந்து நீராடி புத்தாடை அணிந்து பட்டாசு கொழுத்தி வீடுகளிலும், ஆலயங்களிலும் சக்கரைப் பொங்கள் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து குடும்பத்தாருடன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதற்கு ஒப்பாக தை மாதத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக அனைத்து நல்ல காரியங்களும் இறைவன் அருளால் சிறப்பாக இடம் பெற பிரார்;த்தித்தவர்களாக உறவினர் நண்பர் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் அவதாணிக்கக் கூடியதாகவுள்ளது.

Related Post