Breaking
Sat. Dec 28th, 2024

அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு லொறிகள், கார், முச்சக்கர வண்டி மற்றும் வேன் போன்ற வாகனங்களுடன் தொடர்ச்சியாக மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

By

Related Post