ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நவீன ஆடையகத்தில் தொடர்ந்து விளம்பர அறிவிப்பு செய்த பெண்ணை நபர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோவில் நவீன ஆடையகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் 25 வயதான அன்னா நசோவா என்பவர்.
இவர் தனது ஆடையகத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு தொடர்ச்சியாக ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்து வந்துள்ளார்.
இவரது கடை அமைந்துள்ள அதே கட்டிடத்தில் குடியிருந்து வருகிறார் 58 வயதான ஸெர்ஜி கிளாக்கோவ் என்பவர்.
ஆடையகத்தில் இருந்து தொடர்ச்சியான விளம்பரம் கேட்டு அப்பகுதி மக்கள் சலிப்படைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில்,
சம்பவத்தன்று, அன்னா நசோவா வழக்கம் போல கடையில் வாடிக்கையாளர்கள் வரும் பொருட்டு ஒலிப்பெருக்கியில் விளம்பரம் செய்யத் துவங்கியுள்ளார்.
இந்நிலையில் தனத்து வீட்டின் ஜன்னல் வழியாக அன்னா மிது திடீரென்று துப்பாக்கியால் சுட்டுள்ளார் ஸெர்ஜி.
துப்பாக்கி குண்டுகள் பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அன்னாவை சக ஊழியர்கள் சுமந்து சென்று கடைக்குள் கிடத்தினர்,
இதனிடையே அவசர சிகிச்சை பிரிவினரும் ஊர்தியுடன் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்,
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அன்னா இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியான விளம்பர சத்தமே தம்மை கொலை செய்ய தூண்டியதாக கூறும் ஸெர்ஜி, சுடும் முன்னர் எச்சரிக்கை எதுவும் செய்யவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், தம்மை வேலையில் இருந்து நீக்கியதால் அன்று அதிகம் மது அருந்தியதாகவும், அந்த ஆத்திரத்தில் தன்னிலை மறந்து கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அக்கம்பக்கத்தினருடன் ஒற்றுமையுடன் காணப்பட்ட ஸெர்ஜி தற்போது 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.