வடகிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது
இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 380 ஆசிரியர்களும் வடக்கு மாகாணத்தில் 380 ஆசிரியர்களும் மொத்தமாக 1119 ஆசிரியர்கள் நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொண்டார்கள்
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க , கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்மந்தன், அப்துல்லா மஃறூப், மாவை சேனாதிராஜா, எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப், சன்ஜித் சமரசிங்க, எம்.ஏ.சுமந்திரன், கே.துறைரட்ணசிங்கம் , கல்வி உயரதிகாரிகள் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.