– ஊடகப் பிரிவு –
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் ஆய்வு நிலையங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (26) ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் அஸ்கிரிய பீ்டத்தின் வெடருவே உபாலி தேரர் உள்ளிட்ட குழுவினரும், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் செனரத் திசாநாயக்க, மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் பிரியசாந்த குணவர்த்தன உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கல் விகாரையை அண்மித்த பகுதியானது, அபிவிருத்தி செய்யப்படுவது தொடர்பில்இங்கு கலந்துரையாடப்பட்டதோடு, குறித்த பகுதியில் வீதி புனரமைப்பு, மின்சார வசதியை மேம்படுத்தல் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கல் விகாரையை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பௌத்த மதத்தின்முக்கியதுவத்தை தெளிவுபடுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.