Breaking
Thu. Dec 26th, 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு நடத்தும் தொழிற் சந்தையும் கல்விக் கண்காட்சியும் 2015 ஆம் ஆண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இத் தொழிற்சந்தையில் தொழில் மற்றும் தொழிற்பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகள் தங்களது சுய விபரக் கோவையுடன் இத் தொழிற்சந்தையில் கலந்து கொள்ளுமாறு தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு பட்டதாரிகளை அழைக்கிறது.

Related Post