Breaking
Mon. Dec 23rd, 2024

“சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது. இலங்கையின் சூழல்நட்பு தொழிற்துறை கலாசார வளர்ச்சிக்கும் மற்றும் தொழில்துறை கழிவு அகற்றலுக்கும் அரசாங்கத்தின் இந்த முக்கிய செயற்பாடுகள் பாதுகாப்பாக அமையும்” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கையில் முதன் முறையாக சர்வதேச தொழில்துறைகளின் “அபாயகரமான பொருட்களின் பாதுகாப்பு மீதான முகாமைத்துவத்தை நோக்கி” என்ற கருப்பொருளில் நேற்று (17) வியாழக்கிழமை ஹில்டன் ஹேர்ட்டலில் நடைபெற்ற விழிப்புணர்வு அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரசாயன ஆயுதங்கள் தடைக்கான நெதர்லாந்து அமைப்பினர் இலங்கை தனியார் துறையினருடன் கூட்டாக இணைந்து இவ் அமர்வை ஒழுங்கு செய்திருந்தனர்.

உயர் முகாமைத்துவ நிர்வாகங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களுக்கு அபாயகரமான பொருட்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை செய்வது பற்றி விழிப்புணர்வு உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இரண்டு நாள் கொண்ட இவ் அமர்வு ஒழுங்கு செய்யப்ப்ட்டது.

இவ் விழிப்புணர்வு அமர்வில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

இரசாயன ஆயுதங்கள் தடைகளுக்கான நெதர்லாந்து அமைப்பு பல வருடங்களாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிக்கு தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்கிவருகிறது. இவ் அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இவ்வாறான அமர்வுகள் இலங்கையின் சூழல்நட்பு தொழிற்துறை கலாசார வளர்ச்சிக்கும் மற்றும் தொழில்துறை கழிவு அகற்றலுக்கும் முக்கிய வழிமுறைகளாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். இப்பொழுது புதிய அரசாங்கம் தனது புதிய பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளின் நகர்வுகளில்; மேலும் பல தொழில்துறைகளினை அதிகரிக்கவுள்ளதோடு தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது. அடுத்தப்படியாக அரசின் புதிய அபிவிருத்தி முயற்சிகள் மத்தியில் 11 கைத்தொழில் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப வலையங்கள்;, 45 பொருளாதார அபிவிருத்தி வலையங்கள்;, 2 சுற்றுலா வலையங்கள்;, 23 விவசாய வலையங்கள்;, 10 மீன்பிடி அபிவிருத்தி வலையங்கள்; மற்றும் கொத்து கிராமங்களை மையப்படுத்திய 2500 சந்தைகள் ஆகியன உருவாக்கப்படவுள்ளது.

தொழில்துறை அமைச்சர் என்ற ரீதியில் 11 தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப வலையங்கள்; அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை பாராட்டுவது மட்டுமின்றி தெற்காசிய பிராந்தியத்தில் நடுத்தர வருமான தரவரிசையினை மேம்படுத்துவதற்கு அரசின் பொருளாதார சீர்திருத்த முன்னெடுப்பு வரவேற்கத்தக்க விடயமாகும.; விவசாய அடிப்படையில் கிழக்காசியாவிற்கு அடுத்தப்படியாக தெற்காசியா உலகின்

Related Post