Breaking
Mon. Dec 23rd, 2024

-ஊடகப்பிரிவு-  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாத்ததும்பர பிரதேச சபைக்கு, சுயேச்சையாக போட்டியிடவிருந்த பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஹனீப் தலைமயிலான சுயேச்சை குழு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டது.

கடந்த வாரம் கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பர பிரதேச சபையில் சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையிலேயே இந்தக் குழு, எதிர்வரும் தேர்தலில் பாத்ததும்பர பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸுடன் இணைந்து மயில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

குறித்த சுயேச்சை குழுவின் தலைவரான தொழிலதிபர் ஹனீப், மடவளை பசாரின் சமூக சேவகரும், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் முன்னாள் பாத்ததும்பர அமைப்பாளரும் ஆவார்.

 

 

 

Related Post