Breaking
Thu. Jan 16th, 2025

தென்மாகாணத்தில் பாரிய கைத்தொழில்பேட்டையாக விளங்கும் ‘பட அத’ (Bata-Ata Industrial Zone) தொழில்துறை வளையம் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உடனடி மெக வசதிகளை பெற்றுக்கொண்டுள்ளது.
தங்காலையில் அமைந்துள்ள இத்தொழில்துறை வளையத்திற்கு கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திடீர் விஜயத்தினை மேற்கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவ்வயையத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த குறைப்பாடுகளை ஆராய்ந்து வந்ததுடன் அவற்றை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
சில குறைப்பாடுகளை அமைச்சர் 24 மணிநேரத்துக்குள் தீர்த்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் இத்துரித செயற்பாட்டிற்கு தென்மாகாண வர்த்தக சமூகங்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.
இத்திடீர் விஜயத்தின் போது அமைச்சர் அவ்வளைய முதலீட்டாளர் சங்கம் உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடினார். அதனை தொடர்ந்து முதலீட்டாளர்கள் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத நிலையில் இருந்த பிரச்சினைகள் உடனடியாக தீர்த்து வைக்கும் முகமாக ஒவ்வொன்றாக அலசி ஆராயப்பட்டது.
இவ் உரையாடல்களின் முடிவில் அவசர தேவைகளின் நிமித்தம் உட்கட்டைப்பு வசதிகளுக்காக முக்கியமாக பாதைகளை பழுதுபார்க்கும் தேவைகளக்காக அந்ந இடத்திலேயே 4 60 000 அமெரிக்க டொலர் உடனடியாக ஒதுக்கப்பட்டது.

அமைச்சின் பணிப்புரைக்கு அமைய அமைச்சின் அதிகாரிகள் ஹம்பாந்தோட்டை அரசாங்க அதிகாரிகள் இப்பணிகளினை நேரடியாக கண்காணிப்பார்கள்.

பாரிய முதலீட்டு வளைமாக திகழும் ‘பாட்டா-அத்த’ தொழில்துறை வளையம் 2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 106 ஏக்கர் கொண்ட இவ்வளையத்தில் ஐந்து கைக்தொழில்பேட்டைகள் செயலில் ஈடுபடுகின்றன மற்றும் 1200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். Leoch Lanka (Pvt) Ltd, Raigam Ltd, and Senaka Builder Ltd ஆகிய நிறுவனங்கள் தற்போது இங்கு செயல்பாட்டு வருகின்றனர்.
தெற்கில் முக்கிய சர்வதேச விநியோக செயற்பாட்டில் உள்ள மாகம்புர துறைமுகம் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் சர்வதேச விமான நிலையத்துக்குள் வெறுமனே 30 கி.மீ. அரைவிட்ட சுற்றளவில் பாட்டா-அத்த மூலோபாய வளையம் அமைந்துள்ளது. இவ் வளையம் கேந்திர முக்கியத்துவத்தை கொண்டிருப்பதால் அவ் வளையத்திற்கு உட்கட்டமைப்பு உட்பட சீரான போக்குவரத்து வசதிகள் கட்டாய தேவையாக உள்ளது.

Related Post