Breaking
Fri. Nov 22nd, 2024

தொழில் திணைக்களத்தின் தொழில் அதிகாரிகளது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொழில் அதிகாரிகள் தற்போது தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய தினம் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க அறிவித்துள்ளார்.

அரச சேவை தொழில் அதிகாரிகளின் சங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான போராட்டத்தினால் உழைக்கும் மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுமுறை ரத்து செய்யப்பட்டாலும் போராட்டம் தொடரும் என தொழில் அதிகாரிகளின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமகே தெரிவித்துள்ளார்.

தொழில் அதிகாரிகளின் பணி அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடக்கி வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதிலும் 379 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அனைவரும் தொழிற்சங்க போராட்டத்தில் குதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொழில் அதிகாரிகளின் தொழிற்சங்கப் போராட்டத்தினால் 23000 தொழில் வழக்கு விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

By

Related Post