Breaking
Mon. Dec 23rd, 2024

சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாசலுக்கு லுஹர் தொளுஹைக்காக வருகை தந்த ரிசாத் அமைச்சரை தடுக்க முயன்று மூக்குடைபட்டனர் மு காவின் வங்குரோத்து அரசியல் வாதியான கல்முனையின் அதிகாரி தனது வங்குரோத்து நிலைமையை இதன் மூலம் வெளிக்காட்டியுள்ளார்.

ரிசாத் மக்களுடன் சந்தித்து விட்டால் மக்கள் மனங்களில் இடம்பிடித்துவிடுவார் என்கிற அச்சத்தில் இன்று செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் மு காவின் அரசியல் தலைமைகள்.

அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் ஜெமிலும் சிராசும் கலந்துகொண்டிருந்தனர். இவர்களின் பள்ளிவாசல் வருகையை தடுக்க பொலிசாரை பயன்படுத்தியும் உள்ளனர்.

மத ஸ்த்தலன்களை அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் என்கிற போர்வையில் இந்த வீண் குற்ற சாட்டை சுமத்த இவர்கள் முன்வந்த பொது பொலிசார் இந்த விடயத்தை தலையிட்ட போது சாய்ந்தமருது ஊர் மக்கள் கூடி அமைச்சரின் வருகையை வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துசென்று மிகப்பெரும் வரவேற்ப்பையும் அந்த மக்கள் வழங்கியுள்ளனர். ஜும்மா பள்ளி வாசல் தலைவர் ய எம் ஹனீபா தலைமையில் கூட்டம் ஒன்றினையும் நடத்தி உள்ளனர்.

தனது அரசியல் வங்குரோத்து தனத்தை மறைக்க அமைச்சர் ரிசாதின் வருகையை பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்க முற்பட்டமை குறித்து சாதாரண பொது மக்கள் அனைவரும் பள்ளிவாசலில் கூடி நின்று தங்களது கண்டனத்தை மு கா வினர் மீது மக்கள் தெரிவித்துள்ளனர்.

எமதூருக்கு வர இருந்த உள்ளூராட்சி மன்றத்தை தடுத்த எம் பி இன்று  அமைச்சர் ரிசாதின் வருகை தருவதையும் தடுக்க முட்படுகிறார் என மக்கள் கோசங்களும் எழுப்பினர்.

உனக்கு இந்த ஊருக்கு வரும் அத்தனை விடயங்களையும் தடுப்பதுதான் உனது வேலையா என பலரும் விசனம் தெரிவித்ததை காணக்கூடியதாக இருந்தது.

Related Post