Breaking
Sun. Dec 22nd, 2024

தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தினை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது. 25000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவ்வகையில் இவ்வீடுகள் கட்டும் பணி மீரியபெத்தையிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.

நாட்டின் அபிவிருத்திக்கும் ஏற்றுமதி வருமானங்களுக்கும் சிறந்த முன்னேற்றத்தினை வழங்குவது தோட்டத் தொழிலாளர்களின் அரிய பங்களிப்பாகும். அவ்வகையில் அவர்களுக்கான இவ் வீட்டுத்திட்டத்தினை வழங்குவதில் இந்திய அரசாங்கமும் தமது உதவிகளை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் சுமார் 07 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது.  இவ்வாறாக 25000 வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முதலாவது வீடுகள் கட்டும் பணி மீரியபெத்தவிலிருந்து ஆரம்பித்து பண்டாரவளை கொஸ்லாந்தை என்ற பிரதேசங்களில் அமைக்கப்படும். அண்மையில் கொஸ்லாந்தை பிரதேசத்தில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு உயிர்களும் உடமைகளும் சேதத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

Related Post