தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப், முன்னாள் பிரதேச சபை தலைவர் பௌசி, இணைப்பாளர் ரசாக் நளீமி, நீனகேணி மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசல் பிரதித்தலைவர் அடங்கலாக இன்று பிற்பகல் நீனாக்கேணி வில்கம் விகாரை தேரரை சந்தித்து இப்பிரதேசத்தில் இருக்கும் காணி முஸ்லீம்களுடைய பூர்வீகக்காணியாகவும் பல நூறு வருடம் பராமரிக்கப்ட்டதுமாகவும் காணப்படுவதோடு காணிக்கான உறுதிப்பத்திரம் உட்பட உரிமத்துவதுக்கான சகல ஆவணங்களும் எமது சகோதரர்களிடம் காணப்படுவதையும் காண்பித்து விகராதிபதிக்கு விளக்கப்பட்டது.
இதேவேளை நாளை 29.05.2017 ஆம் திகதி நடைபெறவுள்ள திருகோணமலை மாவட்ட அவிவிருத்திகுழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் தோப்பூர் நீனாகேணி முஸ்லிம் விவசாயிகளின் காணி பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுக்கான பிரேனையை முன்வைதுலுள்ள நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துமிக்கதாக அமைத்திருந்தது