Breaking
Fri. Nov 15th, 2024

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தோல்­விக்கு மஹிந்த ராஜ­ப­க் ஷவும், முன்­ன­ணியின் கட்சித் தலை­வர்­களும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழு­வுமே பொறுப்­பேற்க வேண்­டு­மென குற்றம் சாட்­டி­யுள்ள சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா,

“பட்டர்” கேக்கைத் தயா­ரித்த ஐ.ம.சு.மு. ஜனா­தி­ப­தியிடமி­ருந்து “ஐசிங்”கை பெற்றுக் கொள்­ள­வில்லை. எனவே தோல்­விக்கு ஜனா­தி­பதி பொறுப்­பல்ல என்றும் கூறி­யுள்ளார்.

இது தொடர்­பாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் டிலான் பெரேரா மேலும் தெரிவித் திருப்­ப­தா­வது.

மஹிந்த ராஜபக் ஷ குரு­நாகல் மாவட்­டத்தில் போட்­டி­யி­டாமல் கம்­பஹா மாவட்­டத்தில் போட்­டி­யிட்­டி­ருக்­கலாம். அவர் குரு­நா­க­லை தேர்ந்­தெ­டுத்­தது பிழை­யாகும்.
கம்­பஹா மாவட்­டத்தில் போட்­டி­யிட்ட பிர­சன்ன ரண­துங்க ஐ.ம.சு.மு.வில் மஹிந்த –- மைத்­திரி அணி­யென்ற பிரி­வி­னையை ஏற்­ப­டுத்தி முன்­ன­ணியை பின்­ன­டையச் செய்­து­விட்டார்.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் மஹிந்த கம்­ப­ஹாவில் போட்­டி­யிட்­டி­ருக்­கலாம். “பட்டர்” கேக்கை தய­ரித்த ஐ.ம.சு.மு. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­வி­ட­மி­ருந்து “ஐசிங்”கை பெற்றுக் கொள்­ள­வில்லை. இதுவே தோல்­விக்குக் கார­ண­மாகும்.

எனவே தோல்­விக்கு ஜனா­தி­பதி பொறுப்­பல்ல. மஹிந்­தவும், முன்­ன­ணியின் கட்சித் தலை­வர்­களும், சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழு­வுமே தோல்­விக்கு பொறுப்­பேற்க வேண்டும்.

தேர்­த­லுக்கு முன்­ப­தா­கவே மஹிந்­தவை போட்­டி­யிட வேண்டாம். சிறு­பான்மை இனத்­த­வர்­களின் வாக்­குகள் கிடைக்­காது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால தெரி­வித்தார். ஆனால் அதற்கு செவி­சாய்க்­கப்­ப­ட­வில்லை.

நடந்து முடிந்த பொதுத் தேர்­தலில் ஐ.ம.சு. மு.வோ, ஐ.தே.க.வோ பெரும்­பான்மை வெற்றி பெற­வில்லை. எனவே இரு தரப்­பி­னரும் ஆட்­சி­ய­மைக்க முடி­யாது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லேயே ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இன்று அவ்­வா­றா­ன­தொரு ஆட்­சியே ஏற்­ப­டுத்தப் பட­வுள்­ளது. எனவே இதனை தேசிய அர­சாங்கம் எனக் கூற­மு­டி­யாது.

நாட்டின் தேசிய பிரச்­சி­னை­களை அடிப்­ப­டை­யாக வைத்து ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வதே தேசிய அர­சாகும். எனவே இவ் அர­சாங்கம் ஜனா­தி­பதி மைத்திரி தலைமையிலான அரசாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அதிக ஆசனங்கள் கிடைத்திருந்தால் அதற்கே எதிர்க்கட்சி தலைமை வழங்கப்பட வேண்டும்.

இதனை இனவாத ரீதியாக நோக்கக்கூடாது என்றும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Related Post