Breaking
Thu. Dec 26th, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து முன் னாள் பொரு ளாதார அபி விருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்­ஷ விலகியுள்ளார். ஜனா திபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்­ வின் தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்று அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

ஜனவரி 15ஆம் திகதியுடன் (நேற்றுடன்) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பஸில் ராஜபக்ஷ­ அறிவித்துள்ளார் என அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயலாளர் அநுர பிரியதர்­ன யாப்பாவிற்கு விலகல் கடிதம் அனுப்பியுள்ள பஸில், தாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற் படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் பிரசார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் பசில் ராஜபக்ஷ­ நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை நியாயமானதாக நடத்தி முடிக்க ஒத்துழைத்த தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்கள், பொலிஸார், பாதுகாப்பு பிரிவினருக்கும் பஸில் ராஜபக்­ நன்றி தெரிவித்துள்ளார்.

Related Post