Breaking
Mon. Dec 23rd, 2024

தோல் மற்றும் காலணி உற்பத்தியானது இலங்கையின் ஏற்றுமதியில் பாரிய பங்கினை ஏற்படுத்தவுள்ளது!

இலங்கையின் எட்டாவது சர்வதேச காலணி மற்றும் தோல் கண்காட்சியானது உள்ளூர் மற்றும் சர்வதேச வாங்குபவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காட்டப்பட்டதோடு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதல் முறையாக பரந்தளவில் கொள்வனவு செய்வோர் இலங்கை சந்தையில் நுழையும் வாய்ப்பும் கிட்டிருக்கின்றது.

மூன்று நாட்கள் கொண்ட இச் சர்வதேச காலணி மற்றும் தோல் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தின் கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகி 7 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை மிகவும் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இக்கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தோல்பொருள் உற்பத்தியாளர்களால் 200 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

உலகின் பல்வேறு நாடுகளிலும் இலங்கையின் தோற்பொருள் உற்பத்திகளை அறிமுகம் செய்தல் , சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் மற்றும் இதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட இக் கண்காட்சியில் இந்தியா, கென்யா, ஓமான், ஸ்வீடன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகளும் தொழிற்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.

காலணி, தோல் பொருட்கள், தோல் பொருள் தயாரிப்பு மூலப்பொருட்கள், அலங்கார பொருட்கள், தோலால் ஆன போக்குவரத்துக்கான பொருட்கள் பயண பொருட்கள், இரசாயனங்கள், கூறுகள்;, ஆபரணங்கள் மற்றும் இயந்திரங்கள் என காட்சி அரங்குகள் அலங்கரிக்கப்ட்டிருந்தன. அத்துடன் வடிவமைப்பாளர் விருது விழா, பிரத்யேக பேஷன் ஷோ மற்றும் காட்சி அரங்க போட்டி என்பனவும் நாடாத்தப்பட்டன.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு , சர்வதேச வர்த்தக விவகார அமைச்சு மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சியினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

இலங்கையின் காலணி மற்றும் தோல் உற்பத்தினை சர்வதேச அளவில் இட்டுச்செல்வதற்கும் இலங்கையின் காலணி மற்றும் தோல் தயாரிப்பு ஏற்றுமதியாளர்கள் , உற்பத்தியாளர்கள் மற்றும சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்; தங்கள் திறமைகள் மற்றும் திறன்களை உள்நாட்டிலும் சர்வதேசளவிலும் வெளிப்படுத்த இக்கண்காட்சி உந்துசக்தியாக அமைகின்றது.

தெற்காசியா சந்தையில் மூன்றாவது இடத்துக்கு ஏற்றம் அடைந்துள்ளது தோல் மற்றும் காலணி உற்பத்தியானது இலங்கையின் ஏற்றுமதியில் பாரிய பங்கினை ஏற்படுத்தவுள்ளது

தோல்பொருள் தொழில்துறை இலங்கையில் நிலையான இடத்தை பெற்று, பொருளாதார வளர்ச்சிக்கு உதவிவருதோடு வேகமான சர்வதேச சந்தைகளில் ஒரு வழங்கலை உருவாக்கியுள்ளது. இலங்கை தோல் உற்பத்தியானது தெற்காசியா சந்தையில் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடத்துக்கு ஏற்றம் அடைந்துள்ளது.உலக அளவில் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் போட்டி நிலவுகின்ற மத்தியிலும் எமது நாட்டின் தோல் பொருட்கள் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரித்து வருகின்றன .உலக அளவில் தோல் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டுமானால், தோல் பொருட்கள் உற்பத்தியில் சில தரக் கட்டுப்பாடுகளையும், புதிய தொழில் நுட்பங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் காணப்படும் சவால்களை சமாளிக்க முடியும்

கனடா , ஸ்பெயின் ஆகிய நாடுகள் இலங்கையின் தோல் மற்றும் காலணி பொருட்களுக்கான முக்கிய மூன்று சந்தைகள் ஆகும். அடுத்தப்படியாக ஆஸ்திரேலியா, வியட்நாம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முன்னணி இருக்கின்றன. காலணி மற்றும் தோல் பொருட்னளககான சர்வதேச விசாரணைகள் பாக்கிஸ்தான், நேபாளம்;, இந்தியா பிரதானமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்நு கிடைத்துள்ளது. என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இக்கண்காட்சியினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சிறிய, பெரிய தோல் தொழிற்சாலைகள்தான் தோல் பொருட்ளை தயாரிக்கின்றன. எமது உற்பத்தியாளர்கள் 45 சத வீதம் மதிப்பு சேர்க்கப்பட்ட அவர்களது உற்பத்திகளை சர்வதேச கொள்வனவாளர்கள் மத்தியில் நகர்த்த முடியும் என அமைச்சர் ரிஷாட் தனது உரையில் சுட்டிக்காட்டிருந்தார்.

இலங்கையின் காலணி மற்றும் தோல் இத்துறைக்கு சர்வதேசளவில் பாரிய வெற்றி எட்டப்பட்டுள்ளதுடன் ஒரு சாதனையான வளர்ச்சி போக்கும் ஈட்டப்பட்டுள்ளது. இத்துறைக்கு வருடாந்தம் கிடைக்கப்பெறுகின்ற ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய் சீரான வளர்ச்சி கண்டுள்ளது.

ஆடைத்துறையானது, இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுத்தரும் துறையாகும். 2015 ஆம் ஆண்டில் மொத்த ஏற்றுமதியில் 45மூ சதவீத பங்களிப்பினை செய்துள்ளது. என்றாலும், காலணி மற்றும் தோல் ஏற்றுமதி ஒப்பீட்டளவில் குறைவாவே காணப்படுகின்றது.

ri1.jpg2_1

By

Related Post