இலங்கையிலுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக 55 மில்லியன் டொலர்களை உலக வங்கி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற அபிவிருத்தி, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்களுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய யாழ்ப்பாணம், காலி, கண்டி ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு குறித்த நிதி பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகவங்கியால் வழங்கப்படவுள்ள குறித்த நிதியானது குறைந்த வட்டியுடன் 5 வருடஇடைவெளியில் 25 வருடங்களில் மீள் செலுத்துவதற்கு ஏதுவாக வழங்கப்படவுள்ளதாக உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த நகர அபிவிருத்தி திட்டமானது, பெருந்தெருக்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.