நகர பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளை, கிராமப்புறங்களுக்கு மாற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கிராமங்களுக்கு மாற்றப்படும் சிறைச்சாலைகள், திறந்தவெளி சிறைச்சாலைகளாக செயற்படும் என அமைச்சின் செயலாளர் வி. சிவஞானஜோதி குறிப்பிட்டார்.
திறந்தவெளி சிறைச்சாலையில், குற்றவாளிகளை மீண்டும் குற்றமிழைக்காதவர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவ்வாறான சிறைச்சாலைகளில் சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்புகளை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் காரணமாக சிறைச்சாலை அறைகளுக்குள்ளேயே கைதிகள் இருக்கவேண்டிய தேவை ஏற்படாது எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.