Breaking
Mon. Dec 23rd, 2024

சையதுஅலி பைஜி

இந்தோனிஷியாவை சார்ந்த முஹம்மது சோப்ரீன் என்பவர் நடமாடும் இறை இல்லத்தை தோற்றுவித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது. “கடந்த ரமழானில் நோன்பு திறக்கும் நேரத்தில் ஒரு பெரிய சந்தைக்குள் நான் நின்று கொண்டிருந்தேன் நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியதும், ஒரு இடத்தில் அமர்ந்து நோன்பு திறந்து விட்டு மஃரிப் தொழுகைக்கா மஸ்ஜிதை தேடிய போது எனக்கு அருகில் எந்த மஸ்ஜிதும் தென்படவில்லை

அப்போதுதான், இதற்கு ஒரு மாற்று ஏற்பாட்டை செய்வதின் அவசியத்தை நான் உணர்ந்தேன்

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் இறைஇல்லங்களை அமைப்பது தொடர்ப்பான எண்ணம் எனது மனதில் உதயமானது

இப்படி நடமாடும் இறைஇல்லத்தை உருவாக்கி மக்கள் கூட்டம் எங்கெல்லாம் அதிகம் இருக்கிறதோ அங்கெல்லம் இந்த நடமாடும் இறை இல்லத்தை நகர்த்தி கொண்டு நிறுத்துவதின் மூலம் மக்களின் தொழுகைக்கு நம்மால் உதவமுடியும் தொழுகையின் பக்கம் மக்களின் ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என்பதால் இது தொடர்ப்பான பணியில் இறங்கி இந்த ரமளானில் அதை நடை முறைக்கும் கொண்டு வந்து விட்டேன்

முஹம்மது சோப்ரீன் அமைத்துள்ள இந்த நடமாடும் இறை இல்லத்தில் ஒழு செய்வதர்காக 5000 லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கும் வசதியும் செய்ய பட்டிருக்கிறது

அது மட்டும் இல்லாமல் நோன்பு காலங்களில் நோன்பாளிகளுக்கு தேவையான இப்தார் வசதிகளும் இந்த நடமாடும் இறை இல்லத்தில் செய்ய பட்டிருக்கிறது. இந்த நடமாடும் இறை இல்லம் இந்தோனிசயர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Related Post