Breaking
Thu. Nov 14th, 2024

அமெ­ரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லி­ருந்து மின்­னே­பொலிஸ் பிராந்­தி­யத்­துக்கு பய­ணத்தை மேற்­கொண்ட டெல்ற்றா எயார்லைன்ஸ் விமா­ன­மொன்றில் இரு விமானப் பணிப்­பெண்கள் ஒரு­வ­ருடன் ஒருவர் சண்­டையில் ஈடு­பட்­டதால் அந்த விமானம் திசை­மாற்­றப்­பட்டு அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் சால்ட் லேக் நகரில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி விமானம் 37,000 அடி உய­ரத்தில் நடு­வானில் பறந்த வேளை அந்த விமா­னத்­தி­லி­ருந்த இரு பணிப்­பெண்­க­ளி­டையே கடும் வாய்த் தர்க்கம் ஏற்­பட்­டது.

இந்­நி­லையில் அந்த இரு பணிப்­பெண்­களும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் கைமுஷ்­டியால் குத்தி கட்டிப் பிடித்து சண்­டை­யிட ஆரம்­பித்­துள்­ளனர்.

இதனால் விமா­னத்தில் பெரும் பதற்றம் ஏற்­பட்­டது.

இத­னை­ய­டுத்து சால்ட் லேக் நகரில் தரை­யி­றக்­கப்­பட்ட அந்த விமா­னத்­தி­லி­ருந்து மோதலில் ஈடு­பட்ட இரு பணிப்­பெண்­களும் ஏனைய பணி­யாளர் ஒரு­வரும் ஒழுங்­கீ­ன­மான நடத்­தையில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் வெளி­யேற்­றப்­பட்­டனர். தொடர்ந்து 80 நிமிட தாம­தத்­திற்குப் பின்னர் அந்த விமானம் மின்­னே­பொலிஸ் பிராந்­தி­யத்­துக்கு புறப்­பட்­டுள்­ளது.

இதன்­போது விமா­ன­சே­வை­யா­னது தனது பணியாளர்கள் சிலரது ஒழுங்கீன நடவடிக்கைகளால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌ கரியங்களுக்காக மன்னிப்புக் கோரி யுள்ளது.

By

Related Post