12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 243 பேர் இந்த கப்பலில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கப்பல் 28ஆவது தடவையாக கடந்த மாதம் 28ஆம் திகதி ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது.
இதன்படி, இந்த கப்பலில் வருகைத் தந்திருந்த இளைஞர் யுவதிகளை நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கப்பலுக்கு சென்று சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.
கப்பலுக்கு ஜனாதிபதி பிரசன்னமான தருணத்தில் இளைஞர் யுவதிகள் அவருக்கு அமோக வரவேற்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1930ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த கப்பல் கெடட் அதிகாரிகளுக்கான பயிற்சிகளை வழங்கும் செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன், 1985ஆம் ஆண்டு இந்த கப்பல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து உலகிலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்த கப்பல் நட்பு ரீதியான கப்பலாக மாற்றம் பெற்றுள்ளது.
இந்த கப்பலில் வருகைத் தந்த இளைஞர் யுவதிகள் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள விசேட விருந்துபசாரத்திலும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு சென்று நிகழ்வொன்றிலும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 17ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் இந்த இளைஞர் யுவதிகள், அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாக எதிர்பார்த்துள்ளனர்.
அத்துடன், நிபோன் கப்பல் எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் ஜப்பானை நோக்கி சென்று தனது பயணத்தை நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.