Breaking
Mon. Dec 23rd, 2024

அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களால் சாலை விபத்துகள் பெருகிவரும் சவுதி அரேபியாவில் நண்பன் ஓட்டிவந்த கார் மோதி பல அடி தூரத்துக்கு பள்ளி மாணவன் தூக்கி வீசப்படும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

சவுதியின் தெற்கேயுள்ள ஜஸான் மாகாணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், அங்குள்ள மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து செல்லும் அந்த மாணவன் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வேகமாக காரை ஓட்டிவரும் அவனது நண்பன் காரை அவன்மீது மோதிவிடுகிறது. அடிபட்ட வேகத்தில் மாணவன் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு, சாலையின் மறுபுறம் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுகிறான்.

காரில் இருந்து அவனது நண்பர்கள் கீழே இறங்கி, அலறியபடி அந்த மாணவனை காப்பாற்ற ஓடி வருவதும் அங்கிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மாணவன் தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது, குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ.., உங்களுக்காக,,

Related Post