பௌத்த சமயத்திற்கு ஏற்படும் அழுத்தங்களுக்கு எதிராக பாணந்துறை கொள்கை போன்ற வாத விவாதங்களுக்கு தயார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி்ல் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பன்றி ஒற்றன் அண்மையில் எமக்கு விடுத்த கொலை அச்சுறுத்தல் பேச்சு காரணமாக மிகவும் சிறந்த வழி உருவாகியுள்ளது.
அங்காங்கே இருந்து கொண்ட திருட்டு கல்லை பொறுக்கி கண்ணாடி மாளிகைகளுக்கு கல்லெறியாமல், எந்த இடமாக இருந்தாலும் எம்முடன் விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றோம்.
இலங்கையில் முடியாது என்றால் சவூதி அரேபியாவின் மதினா, நபிகள் நாயகத்தின் கல்லறை அருகில் எந்த இடமாக இருந்தாலும் நாங்கள் விவாதத்திற்கு தயார்.
முஸ்லிம் மக்களுகளுடன் எங்களுக்கு பிரச்சினையில்லை. முஸ்லிம் மக்களுக்கு போதிக்கும் விடயங்கள் தான் எமக்கு பிரச்சினை.
இஸ்லாம் என்பது என்னவென்று நாங்கள் கற்றுக்கொடுப்போம் என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.tw