Breaking
Sat. Jan 11th, 2025

மௌலவி செய்யது அலி ஃபைஜி

நபிகள் நாயகம்ம் அவமதித்து கேலி சித்திரம் வரைந்த சார்லி ஹெப்டோவின் தலைமை ஓவியர் மனம் திருந்தினார்
இனி நபிகள் நாயகத்தை அவமதிக்கும் விதத்தில் எந்த கேலி சித்திரத்தையும் வரைய மாட்டேன் என்றும் அறிவித்தார்.
சார்லி ஹெப்டோ என்ற பிரான்ஸ் நாட்டை சார்ந்த கேலி சித்திர பத்திகை 2006 ஆம் ஆண்டில் இருந்தே நபிகள் நாயகம் தொடர்ப்பான பல்வேறு கேலி சித்திரங்களை வரைந்து முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்தது அனைவரும் அறிந்த விசயம்

இந்த கேலி சித்திரங்களை சார்லி ஹெப்டோ பத்திரிகைக்காக அதன் தலைமை ஓவியராக இருந்த ரொனால்ட் லோஸியர் என்பவர் தான் வரைந்திருந்தார்

இவர் வரைந்த கேலி சித்திரத்தால் கொதிப்படைந்து சில முஸ்லிம்கள் சார்லி ஹெப்டோ அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதும் அதனால் பிரான்ஸில் பிரச்சனைகள் உருவானதும் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை முன் எப்போதும் இல்லாத அளவிர்கு நபிகள் நாயகத்தின் கேலி சித்திரங்களை சுமந்த எட்டு மில்லியன் பிரதிகளை வெளியிட்டதும் உலகெங்கும் பரபரப்பை உருவாக்கியது

அந்த கேலி சித்திரங்களை வரைந்த ஓவியர் ரொனால்ட் லோஸியர் கடந்த புதன் அன்று செய்தியாளர்களிடம் பேசும் போது
நான் முஹம்மது நபி பற்றி வரைந்த கேலி சித்திரங்களால் முஹம்மது நபியின் வலிமை என்ன என்பதை நான் உணர்ந்து கொண்டேன்

அவர்களை உயிருக்கு உயிராக நேசிக்ககுடியவர்கள் இந்த உலகில் கோடி கணக்கில் உள்ளனர்

முஹம்மது நபி பற்றிய எனது சித்திரங்கள் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி விட்டது

எனவே இனிவரும் காலங்களில் முஹம்மது நபியை அவமதிக்கும் விதத்தில் எந்த சித்திரத்தையும் வரைய மாட்டேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்த பலர்கள் இஸ்லாத்தில் இணைந்த வரலாறுகள் ஏராளம் உள்ளன ஓவியர் லோஸின் நடவடிக்கையும் அதர்கான முதல் படியாகவே கருத படுகிறது.

Related Post