Breaking
Thu. Jan 9th, 2025

அரசாங்கத்து எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையை கட்சி பேதமற்ற முறையில் மீண்டும் தோற்கடித்து சிறுபான்மை கட்சிகளின் பலத்தை காட்டியுள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (14) திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃறூப், எம்.எஸ்.தௌபீக்,க.துரைரட்ணசிங்கம், இம்ரான் மஹ்ரூப், சன்திப் சமரசிங்க உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்

நாட்டின் இன்றைய சூழ் நிலையில் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு, இளைஞர்களின் வேலை வாய்ப்பு தொடர்பில் அதிகமான கவனத்தை ஈர்த்து நியமனங்களை வழங்குவதில் முதன்மையாக பிரதமர் திகழ்கிறார் மிக விரைவில் 22 ஆயிரம் பட்டதாரிகளுக்கான அரச துறையில் நியமனங்களை வழங்கி வைக்கவுள்ளார்.மஹிந்த, சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக் காலத்தில் பட்டதாரிகள் ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது ஆனால் இந்த அரசாங்கத்தில் அப்படியானதொரு நிலை இல்லை பத்து இலட்சம் தொழில வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தில் தொடர்ச்சியான நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன .

முப்பது வருட கால யுத்த சூழ் நிலையில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த மக்கள் இப்பொது நிம்மதியாக வாழும் சூழ் நிலையிலும் இருண்ட யுகம் ஒன்றை உருவாக்க எதிர்க்கட்சியினர் செயற்படுகிறார்கள் அரசாங்கத்தை முறியடிக்கவோ எம்மை வீழ்த்தவோ முடியாது.

பொருளாதார ரீதியான முன்னேற்றம் உள்ளிட்ட சகல விடயங்களிலும் பிரதமர் உட்பட அரசாங்கத்துக்கு என்றும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் தொடர்ந்தும் எமது ஒத்துழைப்பை வழங்குவோம். அதிகமான காணிக் கச்சேரிகள் நடைபெற்று வருகின்றன இது அனைத்தும் முடிவுறுத்தப்பட்டு எமது மாவட்டத்தில் உள்ள சகல ஏனைய காணி பிரச்சினைகளையும் தீர்த்து உறுதிப் பத்திரங்களையும் வழங்க வேண்டும் என்பதுடன் காணிப் பிணக்குகளை தீர்த்து மக்களுடைய சொந்த காணியில் குடியிருப்பதற்கான நிலையை ஏற்படுத்த வேண்டும் இது வரைக்கும் தேசிய ரீதியில் மூன்று இலட்சம் உறுதிப் பத்திரங்கள் வழக்கப்பட்டுள்ளன இன்று 2050 உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன .

பிரதமரின் அபிவிருத்தியில் சுமார் நான்கு வருட காலமாக சேதமடைந்த  கிண்ணியாவில் காணப்படும் குறிஞ்சாக்கேணி பாலம் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் இதனூடாக பயணிக்கிறார்கள் இதற்கான அங்குரார்ப்பண வைபவமும் எம்.ஈ.எச்.எம் மஹரூப் விளையாட்டரங்கும் திறந்து வைக்கப்படவுள்ளது.

Related Post