ஊடகப் பிரிவு
யெமனின் ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்கும் வகையில் ஈரானின் பூரண ஒத்துழைப்போடு ஹோதி இனத்து ஷிஆக்கள் யெமன் நாட்டின் தலை நகர் சனா மற்றும் ஏடன் நகரை கைப்பற்றி அந்த நாட்டு மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
யெமன் நாட்டின் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அப்துரப்பு மன்சூர் ஹாதி மற்றும் அந்த நாட்டு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஹோதி இனத்து ஷிஆ கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் மேற்கொண்டிருக்கும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை இலங்கை முஸ்லிம்களாகிய நாம் வரவேற்க வேண்டும்.
யெமனின் சட்ட பூர்வ அரசை ஆதரித்தும்,ஷிஆ பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்துமே சவூதி அரசின் தலைமையிலான கூட்டுப் படைகள் தற்போது மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றனர்.
குறிப்பாக, ஷிஆ கிளர்ச்சியாளர்கள் சவூதியில் அமையப்பெற்றிருக்கும் எமது வரலாற்றுப் புனிதமிக்க கஃபா உள்ளிட்ட மக்கா மற்றும் மதீனா நகரங்களை தாக்கியழிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர். பிராந்தியமெங்கும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி முஸ்லிம் நாடுகளில் குழப்பத்தை தோற்றுவிப்பதே ஷிஆக்களின் கொள்கையாகும் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
மேலும், தற்போதைய சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் ஷிஆக்களின் இந்த அயராத சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் செயற்பட்டு வருகிறார். மன்னர் அவர்கள் பதவியேற்ற குறுகிய காலத்தில் ஆளுமையுடன் செயற்பட்டு உள் நாட்டு மற்றும் முஸ்லிம்களுக்காக தனது அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி வருவது பாராட்டுக்குரியதாகும்.
சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் ஆளுமையும் அர்ப்பணிப்பும் மிக்க அயராத சேவை நின்று நிலைக்கவும், முஸ்லிம்களின் தலைமை தாயகமாகத் திகழும் சவூதி அரேபியா எதிர்வரும் காலங்களிலும் தனது அயல் நாடுகளுக்கான மனித நேயப் பணிகளைத் தொடரவும் நாம் அனைவரும் எல்லா வல்ல அல்லாஹ்வை இரு கரமேந்தி பிரார்த்திக்க வேண்டுகிறேன்.
சவூதி அரேபியா இலங்கையை நேசிக்கும் நட்பு நாடு என்ற வகையில் சவூதிக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஸுன்னி முஸ்லிம் நாடுகளில் பிரிவினைகளை ஏற்படுத்துவதோடு, மத்திய கிழக்கிலும் ஏனைய முஸ்லிம் நாடுகளிலும் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க கங்கணம் கட்டி அலையும் நயவஞ்சக ஷிஆக்களுக்கு எதிராக உலகம் பூராக வாழும் உண்மை முஸ்லிம்கள் கிளர்ந்தெழ வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.
சவூதி அரேபியா உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் அன்புடன் அரவனைத்துச் செல்லும் நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக, இலங்கைக்கு அதிகமான உதவிகளை சவூதி அரசாங்கம் செய்திருக்கிறது. மத்திய கிழக்கில் இருந்தே அதிகளவான வருமானம் இலங்கைக்கு வந்தடைகிறது. எமது இலட்சக் கணக்கான உடன்பிறப்புகளை இரக்கமுடன் ஏற்றுக் கொள்ளும் நேச நாடாகவும், ஆபத்தில் உதவும் உற்ற தோழனாகவும் சவூதி திகழ்கிறது.
எனவே, இலங்கை முஸ்லிம்களாகிய நாம் எந்த சந்தர்ப்பத்திலும் எமது முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமையை கருத்திற் கொண்டு சவூதி அரசுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் அவ்வப்போது இலங்கையில் ஊடுருவும் நயவஞ்சக ஷிஆக்களின் ஆபத்திலிருந்தும் நாம் அனைவரும் எமது சமூகத்தை பாதுகாத்திட வேண்டுமெனவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஊடகப்பிரிவு
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.