Breaking
Thu. Feb 13th, 2025

அம்பாறைக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத், முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் மற்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

Related Post