Breaking
Thu. Jan 9th, 2025

நற்பிட்டிமுனை கிராமத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கும், அந்த கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றிவைப்பதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கும் உதவிகளுக்கும், நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நற்பிட்டிமுனை பள்ளி நிர்வாகசபை தலைமையில் உள்ளடங்கிய, ஊர் பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அடங்கிய குழுவினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை இன்று காலை (18) அமைச்சில் சந்தித்து தமது நன்றியறிதலை வெளிப்படுத்தியதுடன், மேற்கொண்டு இந்த கிராமத்தின் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

இந்த சந்திப்பின் போது, நற்பிட்டிமுனை கிராமத்திற்கு அமைச்சரின் பங்களிப்புடன் அபிவிருத்தி பணிகளுக்கு உதவிவரும் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் மொஹமட் முபீத், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த ஹலீம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

எதிர்காலத்திலும் இந்த கிராமத்திற்கான அபிவிருத்தி பணிகளை நன்முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும், மக்களின் ஒத்துழைப்பை தாம் கோரி நிற்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Post