Breaking
Sat. Jan 4th, 2025
இன­வா­தத்தை தோற்­க­டித்து கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்ற நாம் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இனவாத செயற்­பா­டுகள் குறித்து பல வாக்­கு­று­தி­களை வழங்­கினோம்.

அவை நிறை­வேற்­றப்­பட வேண்டுடிய தேவை தற்போது எழுந்துள்ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆளும் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் கடந்த திங்கட் கிழமை இரவு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் தலை­மையில் இடம்­பெற்­றது. இதன்­போதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

நிதி அமைச்­ச­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்கை இல்லா பிரே­ரணை குறித்து ஆராயும் அந்த கூட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி, கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகிக்­காத ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, முற்­போக்கு தமிழ் கூட்­ட­மைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்­து­கொண்­டனர்.
அங்கு முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரி­விக்­கையில்,

2009 ஆம் ஆண்டு யுத்த முடி­விற்கு பின்னர் நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் சக­வாழ்வை ஏற்­ப­டுத்­துக்கும் நல்­லதோர் சந்­தர்ப்பம் ஏற்­பட்­டது. மஹிந்த அர­சாங்கம் அதனை தவ­ற­விட்­டது.

அத்­துடன் கடந்த ஆட்­சியில் முஸ்லிம், தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான இன­வாத செயற்­பா­டுகள் மேலெ­ழுந்­தன. இவற்றை கட்­டுப்­ப­டுத்­தாத மஹிந்த அரசு அவர்­களை போசித்­தது. இதன் கார­ண­மாக சிறு­பான்­மை­யினர் மஹிந்த அரசை வெறுக்க ஆரம்­பித்­தனர்.

அத்­துடன் மனி­த­நே­ய­மிக்க பெரும்­பான்­மையினப் பௌத்த மக்­களும் இன­வாத செயற்­பா­டு­களை விரும்­ப­வில்லை. இதனால் அந்த ஆட்­சியை மாற்ற வேண்டும் என நாட்டு மக்கள் விரும்­பினர். இதற்­க­மைய 2015 ஜனா­தி­பதி தேர்­தலில் எமக்கு மக்கள் வாக்­க­ளித்­தனர்.

நாம் அந்த தேர்­தலில் பல வாக்­கு­று­தி­களை வழங்­கினோம். இன­வாத செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்த எமது வாக்­கு­றுதி முக்­கிய இடத்தை வகித்­தது.

குறிப்­பாக இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யிலும் குரோத மனப்­பான்­மையை தோற்­று­வித்தல், மற்றும் மதத்­த­லை­வர்­களை நிந்­திக்கும் வகையில் செயற்­ப­டு­வதை தடுப்­ப­தற்­கான சட்­ட­மூலம் அமைப்­பது பற்­றி­பே­சினோம். அத்­துடன்,  மத ஸ்தாபனங்­களை பாது­காக்காக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் வாக்­கு­று­தி­ய­ளித்தோம்.

எமது பிரச்­சா­ரங்­களில் இவற்றை முதன்மைப்படுத்தி பேசி­ய­தனால் மக்கள் எமக்கு வாக்­க­ளித்­தனர். அதற்­க­மைய இன­வா­தி­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சட்­டத்தை உட­ன­டி­யாக கொண்டு வர­வேண்­டிய அவ­சர தேவை தற்­போது எழுந்­துள்­ளது.

ஏனெனில் நல்­லாட்­சியில் மீண்டும் இன­வா­தி­களின் கை ஓங்­கி­யுள்­ளது. அவர்கள் மீண்டும் மதங்­களை நிந்­திக்கும் செயற்­பா­டுகளில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் தற்­போது இடம்­பெ­று­கின்­றன. இதனை உட­ன­டி­யாக கட்­டுப்­ப­டுத்தி நாம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை காப்­பாற்ற வேண்டும் என்றார்.

இத­னை­ய­டுத்து கருத்துத் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் இன­வாத செயற்­பா­டுகள் கட்­டுப்­ப­டுத்­தப்­படும். அத்­துடன் நாட்டின் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.

எமது ஆட்சியில் எந்தவொரு மதமும் பாதிக்கப்படுவதனை நாம் விரும்பவில்லை. எனவே முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவோம் என்றார்.

இதேவேளை, தற்போது முஸ்லிம்கள் மீது இனவாதிகள் மேற்கொண்டுவரும் காழ்புணர்வு நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெளிவுபடுத்தியுள்ளார்.

By

Related Post