Breaking
Thu. Dec 26th, 2024
நல்லாட்சியில் எதுவும் மீதமில்லை என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் நல்லாட்சிக்கமைய செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நேற்று போக்குவரத்து தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி பதுளை எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது தற்போது வரையில் நல்லாட்சியில் எதுவும் மீதமில்லை, நல்லாட்சி என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டது மட்டுமே நடந்துள்ளது.

தனிக்கட்சி ஆட்சியமைக்க கட்சியினர் தற்போது முதல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நேற்று, தான் நல்லாட்சிக்கமைய செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post