Breaking
Sun. Dec 22nd, 2024
நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் புதிய அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ள குழுக்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரகங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.

இலங்கையில் அரசு மாற்றம் ஏற்பட்டு ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைய உள்ளது.

அன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்த ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளினால் ஏற்பட்ட அதிருப்தி நிலையை வெளிப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 3 மணிக்கு நுகேகொடை – கொஹூவல சந்தியில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக கொழும்பு – கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பிக்குகள் சிலர் தயாராகி வருகின்றனர்.

நாரஹேன்பிட்டி அபயராமய விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக அபயராமயவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று முன்னிலை சோஷலிசக் கட்சியும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆலோசித்து வருகின்றது.

கட்சியின் அரசியற்குழுத் தலைவர் குமார் குணரட்ணம் விடுதலை செய்யப்படாமை, லலித், குகன் பற்றிய தகவல்கள் வெளியிடப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆலோசித்து வருவதாக அந்த கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் அரசாங்கத்தின் மீது அதிருப்தி நிலை கொண்டிருக்கும் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By

Related Post