ஜனாதிபதிக்கும் நோர்வே தூதுவருக்கும் இடையில் இடையில் இன்று நடந்த கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
100 நாட்கள் செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படமைக்கு நோர்வே தூதுவர் பாராட்டுக்களைத் தெரிவித்தாகவும், பதிலுக்கு நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் முன்னெடுக்கும் அர்ப்பணிப்புக்களை ஒருபோதும் மாற்றப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பில் கூறியுள்ளார்.
இதேவேளை புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் வழங்கும் ஒத்தாசை மற்றும் நாட்டில் சமாதானத்தை கொண்டு வருவதற்கு யுத்த காலத்தில் நோர்வே அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பு என்பவற்றுக்கு ஜனாதிபதி தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சகல நடவடிக்கைகளுக்கும் நோர்வே தன்னுடைய காத்திரமான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.