Breaking
Mon. Nov 18th, 2024

நம்பிக்கை உடயவர்களாகவும்,யாருடைய உதவிகளையும் எதிர்பாராத மக்களாகவும் உங்களை எதிர்காலத்தில் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும்.சுயதொழில் செய்ய கூடிய மக்களாக உங்களை உருவாக்கி அதன் மூலம் உங்களது வாழ்க்கை தரத்தை முன்னேற்றி இந்த பிரதேசத்தை அபிவிருத்தி காண செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கபடுகின்றது.

இன்று(30.12.2016)கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும்நிகழ்வு வாழைச்சேனை அந்நூர்தே சிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பிரதேச செயலக செயலாளர்திருமதி நிஹாரா தலைமையில்இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

குழுக்களாக இணைந்து தையல் தொழில்களில் ஈடுபடுகின்ற போது உற்பத்திகளை அதிகரித்து அதன் மூலம் அதிகளவான இலாபத்தை ஈட்டக்கூடியதாக இருக்கும்.

கல்குடா பிரதேசத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் குடும்ப வருமானத்தில் பெண்களும் பங்கு கொள்ள கூடிய சூழ்நிலை உருவாகும்.அதன் மூலம் அவர்களின் வாழ்கை தரத்தில் முன்னேற்றத்தை எற்படுத்த முடியும்.சுயதொழிலில் ஈடுபடுவர்கள் ஒரு குறித்த தொழிலை அனைவரும் மேற்கொள்ளாமல் ஒவ்வொருவரும் வேவ்வேறான சுய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதனால் தொழில்பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.

இந்த பிரதேசத்தில் தற்போது எங்களால் மேற்கொள்ளப்படுகின்ற பாடசாலை,வீதி,வடிகால் அபிவிருத்திகள் போன்று எதிர்காலதித்திலும் இன்னும் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபட இருக்கின்றது.இங்குள்ள பிள்ளைகள் தூர இடங்களுக்கு சென்று சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்கின்றார்கள் என்பற்காக புதிய பாடசாலைகளை உருவாக்கி அவர்களுக்கு கல்வி கற்பதை இலகுவாக்கி கொடுத்திருக்கின்றோம். கல்வி மூலமே சிறந்த எதிர்கால சந்ததியினரை உருவாக்க முடியும்.

எனது நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்படும் வீதி அபிவிருத்தி வேலைகளுக்கு பல அரசியல் வாதிகள் அவர்களுடைய அபிவிருத்தி செயற்பாடுகள் என உரிமை கோரி இந்த பிரதேசத்திற்க்கு வருகை தரும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மக்களின் அதிகமான வாக்குகளை பெற்ற இவர்கள் இவ்வாறான போலி பிரச்சாரங்களை செய்து மக்களை ஏமாற்றும் வங்குரோத்து அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும். நம்பிகையுடன் வாக்களித்த மக்களுக்கு என்னால் முடியுமான அத்தனை சேவைகளையும் நிச்சயம் செய்து கொடுக்க தயாராக இருக்கின்றேன்.

நல்லாட்சி அரசாங்கத்திலே இன,மத,மொழி பேதமின்றி அனைத்து மக்களும் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலே இவ்வாறான சுய தொழில் உபகரணம் வழங்கும் திட்டம் எல்லா பிரதேசங்களுக்கும் பரவலாக மேற் கொள்ளப்படுகின்றது.இந்த நாட்டிலே இன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்ற பொழுது அதனை நாம் சாமர்த்தியமாக கையாலும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.தேசியத்திலே நடக்கும்.

பிரச்சினைகளை அவதானித்து நிதானமாக செயற்படும் மக்களாக நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பிரதேச மக்கள் இனியும் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறுபவர்களாக இருந்து விடக் கூடாது சிந்தித்து செயலாற்றும் மக்களாக விளிப்படைய வேண்டும். என தனது உரையில் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் 2.2 மில்லியன்பெறுமதியான வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது. இவ் உபகரணங்கள் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள், நாட்டு கோழி
குஞ்சுகள், மீனவர்களுக்கான வலை, சலூன் உரிமையாளர்களுக்கான உபகரணங்கள் மற்றும் பனை உபகரணங்களும்வ ழங்கப்பட்டது.

By

Related Post