புத்தளம்/நல்லாந்தலுவை ஆரம்பப் பாடசாலையில் நேற்று முன்தினம் (14) “நல்லெழிழ்” நூல் வெளியீட்டு வைபவம் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டிப் பிரதேச அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் அவர் உறையாற்றுகையில்,
“இப்பாடசாலையின் இன்றைய கல்வி எழுச்சிக்கு காரணமாக அமைந்திருக்கும் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டுவதோடு, இன்றைய நாளில் இப்பாடசாலையின் வரலாற்றை உள்ளடக்கிய இந்நூல் வைபவத்திலே, இந்தப் பாடசாலையின் ஸ்தாபகர் எனும் வகையில் பெருமையடைவதுடன், நான் அதிகாரத்தில் இருந்த போது இப்பாடசாலையை மிகவும் கடினத்துடன் ஆரம்பித்து வைத்தேன்.
ஆனால், அரசியல் இலாபத்திற்காக இதனை நான் உயர்த்தரப் பாடசாலையாக மாற்றுவதற்கு முயற்சி செய்ததாக சிலர் அபாண்டம் சுமத்தினார்கள். ஆனால், அவ்வாறான நோக்கம் என் மனதில் இல்லை, இது ஓர் சிறந்த ஆரம்பப் பாடசாலையாக தற்காலத்திலும், எதிர்காலத்திலும் திகழ வேண்டும் என்பதே தனது ஆசையாகும்” என்று கூறினார்.
இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கனமூலை அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான பைஷர் மற்றும் கற்பிட்டிப் பிரதேச சபை உறுப்பினர் ஹிஷாம் உட்பட பல பிரமுகர்களும் கலந்துசிறப்பித்ததுடன் “நல்லெழில்” நூலின் முதற்பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.
-ஊடகப்பிரிவு-