ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக 15,000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போர்க்குற்றச் செயல்கள் மற்றும் காணாமல் போனது தொடர்பாக சாட்சியங்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடத்தப்பட்ட காணாமல் போனவர்களின் மற்றும் உயிரிழந்த பெற்றோர் அமைப்பு இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைக் குழுவினர் இந்த கடிதங்களை பரிசீலனை செய்து விசாரிப்பார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.