அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சரான நவீன் திஸாநாயக்க அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்துகொள்வதாகவும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர், எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் எதிரணியுடன் நாளை உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இவர் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.