Breaking
Tue. Mar 18th, 2025
வர்த்தகர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நவ்சர் பவுசிக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த குற்றப் பத்திரிகை கொழும்பு பிரதம நீதவான் கிகான் பிலபிடிய முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குருந்துவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக, நவ்சர் பவுசிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 30ம் திகதிக்கு மேற்கொள்ள நீதவான் தீர்மானித்துள்ளார்.

By

Related Post