கல்பிட்டி (ஆண்டான்கணி ) பிரதேசத்தில் “நவ உதகம்மான” வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று முன்தினம் (26)இடம்பெற்றது. இந்த விழாவில் ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார் .
இந்நிகழ்வில் விசேட அதிதியாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை அமைப்பாளருமான ஆஷிக் மற்றும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கனமூலை அமைப்பாளருமான பைசல், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், கண்டக்குழி அமைப்பாளருமான பவ்சான், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான அக்மல், சலாஹுதீன் உள்ளிட்டவர்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர் .
“அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தாருங்கள். அம்மக்கள் மழைக்காலங்களில் இருப்பதற்கு இடமின்றி அல்லோல கல்லோல படுகின்றனர். அவர்களுக்கு கட்சி பாகுபாடின்றி நாம் உதவ வேண்டும். இம்மக்களின் துயர் துடைக்க முன்வந்து உதவுங்கள்” என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியிடம் உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் வேண்டுகோள் விடுத்தார்.
அதனையடுத்து, இந்த வீடுகள் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு, துரிதமாக வேலைகளை ஆரம்பிக்கும் படிக்கூறி, உரிய அதிகாரிகளை அக்கரைப்பற்று பகுதிக்கு பாராளும்மன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
(ன)