Breaking
Wed. Jan 8th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்கள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமமான முள்ளிப்பள்ள கிராமத்திற்கு பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் எங்கள் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் எமது பிரதேசத்திற்கு ஒதுக்கப்படுகின்ற நிதி மூலம் கட்சி பேதங்கள் இன்றி பாகுபாடு இல்லாமல் அந்த நிதியானது குறிப்பிட்ட மக்களை சென்றடையும் என்பதில் எந்த சந்தேகமுமும் கிடையாது என்று கூறினார்.

அந்த வகையில் முள்ளிப்பள்ளம் கிராமத்திற்கு அடிப்படை பிரச்சினைகளான வீடு, காணி, தொழில் வாய்ப்பு போன்ற பிரச்சினைகள் உள்ள ஒரு கிராமமாக உள்ளது இவைகளை தீர்ப்பதற்கு தீர்வுபெற்றுத்தரும் என்றும் தெரிவித்தார்…

Related Post