Breaking
Mon. Dec 23rd, 2024

நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அதன் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என கேட்டே போதே அவர்கள் அவ்வாறு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் குற்றவாளிகள் அல்ல நாம் தொடர்ந்து கடந்த 5 மாதகாலமாக விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளோம். எம்மை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதற்கு பதிலளித்த நீதவான் பிணை விண்ணபத்தினை நீங்கள் மேல் நீதிமன்றில் தான் தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது வழக்கு விசாரணை முடிவில் தான் தெரிய வரும் என தெரிவித்து ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.

By

Related Post