Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கை நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று காலை விசேட விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே விசேட விருந்தினராக நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரதான நுழைவாயிலில் இந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக பிடிக்கப்பட்ட நாகப்பாம்பு, வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் பல வகையிலான பாம்புகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post